செய்திகள்
டோனி - வார்னர்

ஐதராபாத் அணியுடன் இன்று மோதல் - சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது வெற்றி ஆர்வம்

Published On 2021-04-28 09:39 GMT   |   Update On 2021-04-28 09:39 GMT
3 முறை சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

புதுடெல்லி:

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் சென்னை, மும்பையில் போட்டிகள் முடிந்துவிட்டது. அகமதாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டெல்லி மைதானத்தில் இன்று முதல் போட்டிகள் ஆரம்பமாகிறது.

3 முறை சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

சி.எஸ்.கே அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதன் பிறகு தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் பஞ்சாப் கிங்சை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 45 ரன் வித்தியாசத்திலும், 4-வது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்சை 18 ரன் வித்தியாசத்திலும், 5-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 69 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 6-வது போட்டியில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை இன்று சந்திக்கிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

சி.எஸ்.கே. அணியின் அதிரடி இன்றும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஐதராபாத் அணியை வீழ்த்தி 5-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும்பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறும்.

ஆல்ரவுண்டர் பணியில் ரவீந்திர ஜடேஜா மிகவும் சிறப்பான நிலையில் உள்ளார். பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்தார். ஓரே ஓவரில் 36 ரன் விளாசி சாதனை படைத்ததார்.இதேபோல மொய்ன் அலி, சாம் கரண் ஆகியோரும் ஆல்ரவுண்டர் பணியில் சிறப்பாக செயல்படுபவர்கள்.

பேட்டிங்கில் டுபிளசிஸ் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 5 ஆட்டத்தில் 214 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோல ரெய்னா, அம்பதி ராயுடு போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள். பந்துவீச்சில் தீபக் சாஹர், நிகிடி, ‌ஷர்துல் தாகூர் ஆகியோர் முத்திரை பதிக்கக் கூடியவர்கள்.

ஐதராபாத் அணி ஒரு வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

ஐதராபாத் அணி பஞ்சாப்பை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கொல்கத்தா, பெங்களூர், மும்பை, டெல்லி அணிகளிடம் தோற்று இருந்தது.

Tags:    

Similar News