ஆன்மிகம்
குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ததை படத்தில் காணலாம்.

காரைக்கால் கோட்டுச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா

Published On 2020-10-30 06:30 GMT   |   Update On 2020-10-30 06:30 GMT
காரைக்கால் கோட்டுச்சேரியில் சீதளாதேவி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
காரைக்கால் கோட்டுச்சேரியில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு செய்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, மீண்டும் குடமுழுக்கு செய்ய கோவில் நிர்வாகம் முன்வந்தது.

அதன்படி கடந்த சில மாதங்களாக திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. பணிகள் முடிந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக குடமுழுக்கை நடத்த முடியவில்லை. இந்தநிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த புதுச்சேரி அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து குடமுழுக்கு விழா நடத்த அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. விழாவை முன்னிட்டு கடந்த 26-ந் தேதி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து, பூர்ணாகுதி நடைபெற்றது. இதைத்தொடர்து மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் கலசங்களை கோவிலை சுற்றி சிவாச்சாரியார்கள் எடுத்து வந்தனர்.

இதையடுத்து கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து தீபாராதனை நடைபெற்றது. விழாவில், புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், நெடுங்காடு தொகுதியை சேர்ந்த சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஓமலிங்கம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News