ஆட்டோமொபைல்

டாடா நெக்சன் AMT முன்பதிவு இந்தியாவில் துவங்கியது

Published On 2018-02-22 11:01 GMT   |   Update On 2018-02-22 11:01 GMT
டாடா நெக்சன் AMT முன்பதிவு இந்தியாவில் இயங்கி வரும் அதிகாரப்பூர்வ டாடா மோட்டார்ஸ் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி:

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சன் AMT முன்பதிவு பெங்களூருவில் இயங்கி வரும் டாடா மோட்டார்ஸ் விற்பனையாளர்கள் துவங்கியுள்ளனர். டாடா நெக்சன் AMT வெளியீடு உறுதி செய்யாத நிலையில், முன்பதிவு செய்ய ரூ.11,000 செலுத்த வேண்டும். 

இந்தியாவில் டாடா நெக்சன் AMT வெளியீடு மார்ச் அல்லது ஏப்ரல் மாத முதல் வாரத்தில் துவங்கி அதன் பின் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் நிறத்திற்கு ஏற்ப விநியோகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய நெக்சன் AMT சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்யப்பட்டது. 

டாடா நெக்சன் AMT ஃபோர்டு இகோஸ்போர்ட் ஆட்டோமேடிக், மஹேந்திரா TUV300 AMT மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. இரண்டு கார்களும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. டாடா நெக்சனில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய AMT கியர்பாக்ஸ் XTA மிட்-வேரியண்ட் மற்றும் டாப் எண்ட் XZA மாடல்களில் வழங்கப்படுகிறது. 



புதிய AMT கியர்பாக்ஸ் தவிர எஸ்.யு.வி. மாடலின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. டாடா நெக்சன் AMT மாடலில் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 108.5 பி.ஹெச்.பி. @5000 ஆர்.பி.எம். மற்றும் 170 என்.எம். டார்கியூ @1750 ஆர்.பி.எம். செயல்திறன் கொண்டுள்ளது. 

இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் யூனிட் 108.5 பி.ஹெச்.பி. @3750 ஆர்.பி.எம். மற்றும் 260 என்.எம். டார்கியூ @1500 ஆர்.பி.எம். கொண்டுள்ளது. இதன் மைலேஜ் விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், இது மேனுவல் வேரியண்ட்களுக்கு ஏற்ப மாறுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெக்சன் AMT விலையை டாடா இதுவரை அறிவிக்காத நிலையில், நெக்சன் AMT மேனுவல் வேரியண்ட் மாடலை விட ரூ.50,000 வரை கூடுதலாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நெக்சன் மேனுவல் வேரியண்ட் விலை ரூ.5.99 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.9.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News