உள்ளூர் செய்திகள்
பள்ளி கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

பல்லடத்தில் பழுதான பள்ளி கட்டிடங்கள் ஆய்வு

Published On 2021-12-25 08:12 GMT   |   Update On 2021-12-25 08:12 GMT
பல்லடம் வட்டாரத்தில் இடிக்கப்பட வேண்டிய மற்றும் பழுது பார்க்க வேண்டிய அரசு பள்ளி கட்டிடங்கள் குறித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
பல்லடம்:

பல்லடம் வட்டாரத்தில் அரசு துவக்க பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 19 கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டியவை. 

70 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பழுது பார்க்க வேண்டியவை என வட்டார கல்வி அதிகாரிகள் மாவட்ட கல்வி அலுவலருக்கு அறிக்கை அனுப்பி இருந்தனர் .

இந்த நிலையில் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ஜெயக்குமார் மற்றும் குழுவினர் பல்லடம் வட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில்:

பல்லடம் வட்டாரத்தில் இடிக்கப்பட வேண்டிய மற்றும் பழுது பார்க்க வேண்டிய அரசு பள்ளி கட்டிடங்கள் குறித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. 

இதனடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் அறிக்கையை தொடர்ந்து மிகவும் பழுதான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்படும். அதிகாரிகளின் உத்தரவையடுத்து பழுதான கட்டிடங்கள் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News