செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு

Published On 2021-01-20 06:08 GMT   |   Update On 2021-01-20 06:08 GMT
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,152-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் இன்று 3-வது நாளாக உயர்வு காணப்பட்டது. நேற்று பவுனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 56-க்கு விற்றது.

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 152-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.12 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 644 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.71 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.20-க்கு விற்கிறது.

சில வாரங்களுக்கு முன்பு தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் மீண்டும் உயர்வை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News