ஆன்மிகம்
சித்துர் அருகே நந்தி வாய் வழியாக தண்ணீர் வருகிறது

சித்துர் அருகே நந்தி வாய் வழியாக தண்ணீர் வருகிறது

Published On 2020-12-16 06:06 GMT   |   Update On 2020-12-16 06:06 GMT
ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோவில் புஷ்கரணியில் உள்ள நந்தி வாயிலிருந்து தண்ணீர் விழுகிறது. இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் சென்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
சித்தூர் மாவட்டம் குர்ரங்கொண்டாவின் கிழக்குப் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நீண்ட நாட்களாக பூஜைகள் செய்யப்படாமல் உள்ளது. இந்த நிலையில் குர்ரங்கொண்டாவை சேர்ந்த பக்தர்கள் சிவன் கோவிலை சுத்தம் செய்து வருகின்றனர். இதனால் பண்டிகைகளின் போது மக்கள் சிவபெருமானை வணங்கி செல்கின்றனர்.

கோவிலுக்கு முன்னால் இருந்த புஷ்கரணியும் சுத்தம் செய்யப்பட்டது. இப்போது அந்த புஷ்கரணியில் உள்ள நந்தி வாயிலிருந்து தண்ணீர் விழுகிறது. இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் சென்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
Tags:    

Similar News