அழகுக் குறிப்புகள்
அனைத்து விதமான சரும பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் ஆரஞ்சு தோல்

அனைத்து விதமான சரும பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் ஆரஞ்சு தோல்

Published On 2022-03-24 07:32 GMT   |   Update On 2022-03-24 07:32 GMT
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் C மற்றும் ஆண்டிஆக்ஸைட் அதிகளவு உள்ளதால் இவற்றின் தோலை முக அழகிற்கு பயன்படுத்தும் போது சருமம் பொலிவுடனும், வெண்மையாகவும் காணப்படும்.
அழகு குறிப்பு: 1

ஆரஞ்சு பழத்தோலை இனி தூக்கி எரியாமல் வெயிலில் நன்றாக காயவைத்து, பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்த ஆரஞ்சு பழத்தோல் பொடியை ஒரு  ஸ்பூன் எடுத்து கொள்ளவும், பின்பு பாதாம் பருப்பையும் நன்றாக அரைத்து பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.

இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். பின்பு அதனுடன் இரண்டு ஸ்பூன் பசும்பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி,  நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை முகத்தில் இந்த கலவையை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ, சருமம் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும், வெண்மையாவும் காணப்படும்.

அழகு குறிப்பு: 2

ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு தோலை எடுத்துக்கொள்ளவும், அதனுடன் ஒரு ஸ்பூன் பசும்பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால்  முகத்தை கழுவவும்.

இந்த முறையை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், எண்ணெய் பசை கொண்ட சருமம், மேடுபள்ளம் கொண்ட சருமம்  மற்றும் பருக்கள் ஆகிய பிரச்சனைகளை சரி செய்யும். அதுமட்டும் இன்றி சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இதனால் சருமம் எப்பொழுதும்  பொலிவுடன் காணப்படும்.

அழகு குறிப்பு: 3

ஆரஞ்சு பழத்தோல் மற்றும் வேப்பிலை(ஆரஞ்சு தோல் பவுடர் பயன்கள்): ஆரஞ்சு தோலை அரைத்து கொள்ளவும். பின்பு வேப்பிலையை அரைத்து பேஸ்ட்டாக  வைத்து கொள்ளவும்.

ஒரு ஸ்பூன் ஆரஞ்சு தோல், இரண்டு ஸ்பூன் வேப்பிலை பேஸ்ட் மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து இந்த கலவையை  சருமத்தில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் வரை காத்திருந்து பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பசை பிரச்சனை சரியாகும். மேலும் சருமத்தை எப்போதும் அழகாகவும் பொலிவுடனும் வைத்திட இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வரலாம்.
Tags:    

Similar News