செய்திகள்
சித்தரிப்பு படம்

ஜார்க்கண்ட்: குடிபோதையில் அதிகாரி உள்பட இருவரை சுட்டுக்கொன்ற சி.ஆர்.பி.எப். வீரர்

Published On 2019-12-10 12:55 GMT   |   Update On 2019-12-10 12:55 GMT
5 கட்டங்களாக சட்டசபை தேர்தலை சந்தித்துவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப். வீரர் குடிபோதையில் அதிகாரி உள்பட இருவரை சுட்டுக்கொன்றார்.
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன.

இதற்காக உள்ளூர் போலீசார் தவிர சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய துணை ராணுவப் படையினரும் ஏராளமான அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் இரும்பு நகரம் என்றழைக்கப்படும் பொக்காரோ நகரில் உள்ள மத்திய துணை ராணுவப்படையின் முகாமில் நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் குடிபோதையில் ஒரு வீரர் கண்மூடித்தனமாக துப்பாக்கிடாக் சுட்டத்தில் உதவி ஆணையாளர் ஷாஹுல் ஹர்ஷன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பூர்னானந்த் புயான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்த இரு காவலர்கள் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News