லைஃப்ஸ்டைல்
இஞ்சி பர்ஃபி

வயிற்று மந்தம், வாந்தியை கட்டுப்படுத்தும் இஞ்சி பர்ஃபி

Published On 2021-01-20 09:43 GMT   |   Update On 2021-01-20 09:43 GMT
வாந்தி, வாய்க்கசப்பு, வயிற்று மந்தம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சி பர்ஃபி சாப்பிடலாம். இஞ்சி பர்ஃபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பிஞ்சு இஞ்சி அல்லது சுக்குப் பொடி - 100 கிராம்
கருப்பட்டி அல்லது சர்க்கரை அல்லது வெல்லம் - ஒரு கப்
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை :

இஞ்சியைத் தோல் சீவி மிக்சியில் போட்டு கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு கருப்பட்டி அல்லது சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து கம்பி பாகு பதம் வரும்வரை காய்ச்சுங்கள். (சிறிது பாகை எடுத்து தண்ணீரில் போட்டால் கரையாமல் இருக்கும். இது தான் பாகு பதம்).

இந்த பக்குவம் வந்தவுடன் அரைத்த இஞ்சி விழுதை பாகில் சேர்த்து கைவிடாமல் நன்றாக கலக்கவும்.

இந்தக் கலவை நன்றாக நுரைத்து திக்கான பதம் வந்ததும் அரை டேபிள் ஸ்பூன் நெய்,  ஏலக்காய்ப்பொடி தூவி கொஞ்சம் உப்பு தூவி இறக்குங்கள்.

இப்பொழுது ஒரு தட்டில் நெய்யை தடவி அதன் மேல் இந்தக் கலவையைக் கொட்டுங்கள்.

சூடாக இருக்கும் போதே சதுர வடிவில் பர்ஃபியாக வெட்டி சற்று ஆறியதும் அவற்றை தனியாக எடுங்கள்.

சூடான காரசாரமான இனிப்பான இஞ்சி பர்ஃபி ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News