செய்திகள்
கொரோனா வைரஸ்

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று

Published On 2021-01-05 06:43 GMT   |   Update On 2021-01-05 06:43 GMT
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை:

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளராக இருப்பவர் கு. ராமகிருஷ்ணன். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதனையடுத்து ராமகிருஷ்ணன் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில் ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News