உள்ளூர் செய்திகள்
குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடிய போலீசார்.

குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் கொண்டாடிய போலீசார்

Published On 2022-01-15 07:28 GMT   |   Update On 2022-01-15 07:28 GMT
இந்த பொங்கல் பண்டிகையை அனைவரும் அவர்களது குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் காவல் ஆளிநர்கள் இணைந்து குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் கொண்டாடினர்.
தென்காசி:

தமிழரின் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாகவும், நண்பர்களையும், உறவினர் களையும் உபசரித்தல், உழவுத் தொழிலுக்கு பெருமை சேர்த்தல் போன்ற நற்பண்புகளின் அடையாளமாக விளங்குவது பொங்கல் பண்டிகை. 

இந்த பொங்கல் பண்டிகையை அனைவரும் அவர்களது குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் காவல் ஆளிநர்கள் இணைத்து மேலகரம் பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கினர். 

மேலும் கவனம் சிதறாமல் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பெரிய பதவிக்கு செல்ல வேண்டும் என்பதே உங்களது குறிக்கோளாக இருக்க வேண்டும் என தென்காசி காவல்துறையினர் அறிவுரைகளை வழங்கினர்.
Tags:    

Similar News