செய்திகள்
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கல்யாணி யானையை படத்தில் காணலாம்.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கல்யாணி யானைக்கு உடல்நிலை பாதிப்பு

Published On 2021-05-15 08:23 GMT   |   Update On 2021-05-15 08:23 GMT
கோவில் யானை ஒரு வாரமாக கோவிலுக்கு பூஜைக்கு வராமல் இருப்பதாலும், சரியாக உணவு உட்கொள்ளாமல் சோர்வாக இருப்பது கோவில் ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடவள்ளி: 

கோவை மாவட்டம் பேரூரில் பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கல்யாணி(29) என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வார காலமாக கல்யாணி யானை உடல் நலக்குறைவால் உணவு கூட உட்கொள்ளாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறது.

இதுகுறித்து யானை பராமரித்து வரும் பாகன் ரவி கோவில் நிர்வாகத்திடம் கூறியுள்ளார். உடனடியாக கோவில் நிர்வாகத்தினர் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் மனோகரனுக்கு தகவல் கொடுத்து அவரை வரவழைத்து யானையின் உடல் நிலையை பரிசோதனை செய்தனர்.

அப்போது யானைக்கு பல் வலி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து யானைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில் வேலன் கூறுகையில், கடந்த ஒரு வாரமாகவே கல்யாணி யானைக்கு பல் வலி உள்ளது. தற்போது யானைக்கு அதற்கான சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் யானைக்கு வயது ஆகி விட்டதால் அதனால் சரியான உணவு சாப்பிட முடிவதில்லை.

சோளம், கரும்பு போன்ற உணவுகளை தவிர்த்து, எளிதில் உண்ணக்கூடிய பழங்கள் போன்றவற்றை தற்போது கொடுத்து வருகிறோம் என்றார்.

இருப்பினும் உடனடியாக சிறப்பு மருத்துவ குழு அமைத்து யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவில் யானை ஒரு வாரமாக கோவிலுக்கு பூஜைக்கு வராமல் இருப்பதாலும், சரியாக உணவு உட்கொள்ளாமல் சோர்வாக இருப்பது கோவில் ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News