தொழில்நுட்பம்
அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட்

20 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

Published On 2019-08-06 06:34 GMT   |   Update On 2019-08-06 06:34 GMT
ஹூவாமி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது 20 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஹூவாமி நிறுவனம் இந்தியாவில் அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் அமேஸ்ஃபிட் வெர்ஜ் மாடலின் விலை குறைந்த வெர்ஷன் ஆகும்.

புதிய அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன், அவுட்-டோர் ரன்னிங், டிரெட்மில், வாக்கிங், அவுட்-டோக் சைக்லிங், இன்-டோர் சைக்லிங், எலிப்டிக்கல் டிரெயினர், எக்சர்சைஸ் என பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, கன்டினிவஸ் ஹார்ட் ரேட் மாணிட்டரிங் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது. இதில் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் இல்லை என்பதால் இதை கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளவோ, ஏற்கவோ முடியாது.

இதில் GPS + GLONASS வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வைபை கனெக்டிவிட்டி, கைரோஸ்கோப், ஜியோமேக்னெடிக் சென்சார் மற்றும் ஏர் பிரெஷர் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட் சிறப்பம்சங்கள்

- 1.3 இன்ச் 360x360 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
- ப்ளூடூத் 5.0 LE, GPS+GLONASS
- ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐ.ஒ.எஸ். iOS 9.0 இயங்குதள சாதனங்களில் சப்போர்ட் செய்யும்
- ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
- ஸ்லீப் மாணிட்டரிங், மியூசிக் கண்ட்ரோல், சைலன்ட் அலாரம்
- ஸ்போர்ட்ஸ் டிராக்கிங்
- ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார்
- 390 எம்.ஏ.ஹெச். பேட்டரி

அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட் ஷார்க் கிரே, ஸ்னோகேப் வைட் என இருவித நிறங்களில் சிலிகான் ஸ்டிராப் உடன் வருகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News