செய்திகள்
மழை வேண்டி மூதாட்டிகள் ஒப்பாரி வைத்து நூதன வழிபாட்டில் ஈடுபட்ட காட்சி.

ஆரணி அருகே மழை வேண்டி மூதாட்டிகள் ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு

Published On 2021-06-08 05:54 GMT   |   Update On 2021-06-08 05:54 GMT
கிராம மக்கள் மழை வேண்டி ஓன்று கூடி ஆதனூர் ஏரியில் உள்ள ஸ்ரீசெல்லியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர்.
ஆரணி:

ஆரணியில் மழை வேண்டி மூதாட்டிகள் ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு செய்தனர். கிராம மக்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.

இந்த கிராமத்தில் சுமார் 1500 ஏக்கர் பரபரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்தாண்டு கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகளவில் உள்ளதால் நிலத்தடி நீர் வறண்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிராம மக்கள் மழை வேண்டி ஓன்று கூடி ஆதனூர் ஏரியில் உள்ள ஸ்ரீசெல்லியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். அம்மனுக்கு களி, கறி விருந்து உள்ளிட்டவைகளை படையல் போட்டு வழிபட்டனர்.

பின்னர் மூதாட்டிகள் ஓன்றிணைந்து ஓப்பாரி வைத்து வழிபாடு நடத்தினர். இதையடுத்து கிராம மக்களுக்கு கறி, களி விருந்து பரிமாறப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.



Tags:    

Similar News