செய்திகள்
ஐ.நா. சபை

ஆப்கானிஸ்தான் சுகாதார அமைப்பை காப்பாற்ற அவசர நிதியை விடுவித்தது ஐ.நா.

Published On 2021-09-22 11:02 GMT   |   Update On 2021-09-22 11:02 GMT
ஆப்கானிஸ்தானில் மருந்துகள், மருத்துவ பொருட்கள் மற்றும் எரிபொருள் தீர்ந்துவிட்டதால் உதவி தேவைப்படுவதாக ஐ.நா. அவசர நிவாரண ஒருங்கிணைப்பாளர் கூறி உள்ளார்.
ஜெனீவா:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டின் சுகாதார அமைப்பு கடும் நெருக்கடியில் உள்ளது. மருத்துவ உதவிப்பொருட்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சுகாதார வசதிகளும் போதுமானதாக இல்லை. எனவே, சுகாதார அமைப்பு முற்றிலும் சிதைவடைவதைத் தடுக்க 45 மில்லியன் டாலர் அவசர நிதியை ஐ.நா. விடுவித்துள்ளது. 

பேரழிவைத் தவிர்க்கும் முயற்சியாக, ஆப்கானிஸ்தானில் உயிர்காக்கும் ஆதரவை அதிகரிக்க ஐ.நா.வின் மத்திய அவசரகால நிதியிலிருந்து நிதியை விடுவிப்பதாக, மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் அவசர நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கூறினார்.

ஆப்கானிஸ்தான் நிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் மருந்துகள், மருத்துவ பொருட்கள் மற்றும் எரிபொருள் தீர்ந்துவிட்டது. அத்தியாவசிய சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. சுகாதாரப் பாதுகாப்பு விநியோக முறை வீழ்ச்சியடைய அனுமதிப்பது பேரழிவைத் தரும். நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அவசரகால சிசேரியன் பிரிவுகள் மற்றும் விபத்து சிகிச்சை பிரிவு போன்ற ஆரம்ப சுகாதாரப் பராமரிப்புக்கான அனுமதி மறுக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளார்.
Tags:    

Similar News