ஆன்மிகம்
சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரிந்த காட்சி, சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய காட்சி

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

Published On 2020-01-16 06:07 GMT   |   Update On 2020-01-16 06:07 GMT
பொன்னம்பல மேட்டில் சரணகோ‌ஷம் சபரிமலையில் மகரஜோதி தரிசனம் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் ஆண்டு முழுவதும் பல் வேறு பூஜைகள் நடை பெற்றாலும், மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை ஆகியவை மிகவும் பிரசித்திபெற்றதாகும்.

இந்த ஆண்டு மண்டல பூஜை கடந்த டிசம்பர் மாதம் 27-ந்தேதி நிறைவுபெற்றது. அதைத்தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப் பட்டது. மறுநாள் (31-ந்தேதி) முதல் சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடை பெற்று வந்தது. பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை நேற்று (15-ந்தேதி) மாலை நடைபெற்றது.

மகரவிளக்கு பூஜைக்கு முன்பு நடைபெறும் மற்றொரு முக்கிய பூஜையான மகர சங்கிரம பூஜை அதிகாலை 2.09 மணிக்கு நடைபெற்றது. திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து கன்னி அய்யப்பன்மார் கொண்டுவந்த நெய் மூலம் சுவாமி அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு இந்த பூஜை நடைபெற்றது.

வழக்கமாக அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் சபரி மலை கோவில் நடை இரவு 11 மணிக்கு அடைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு மகர சங்கரம பூஜை அதிகாலை யில் வந்ததால் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட வில்லை. மகர சங்கரம பூஜை முடிந்தபிறகு அதிகாலை 2.30 மணிக்கு நடை சாத்தப் பட்டு மீண்டும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. அதிகாலை வரை சபரிமலை கோவில் நடை திறந்திருப்பது எப்போதாவது நடைபெறும் அபூர்வ நிகழ்வாகும்.

அதிகாலையில் நடை திறந்த பிறகு சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெற்றது. மகர விளக்கு பூஜையின் போது சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவா பரணங்கள் அடங்கிய பெட்டி நேற்று மாலை 6 மணிக்கு சபரிமலை சன்னிதானம் வந்தடைந்தது. பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டு திருவாபரண பெட்டி 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப் பட்டது.

மாலை 6.30 மணிக்கு அந்த ஆபரணங்கள் சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப் பட்டது. 6.50 மணிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு மகரவிளக்கு பூஜை நடை பெற்றது. அதே நேரம் சபரி மலையில் உள்ள மலை பகுதியான பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரிந்தது. ஜோதி வடிவில் சுவாமி அய்யப்பன் பக்தர் களுக்கு காட்சி அளிப்பதாக ஐதீகம் என்பதால் 3 முறை தெரிந்த ஜோதியை லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் தரிசனம் செய்தனர். மகரஜோதி தரிசனத்தின்போது சபரி மலையில் கூடியிருந்த அய்யப்ப பக்தர்கள் எழுப்பிய சாமியே சரணம் அய்யப்பா.... என்ற பக்திகோ‌ஷம் விண் அதிர எழுந்தது.

மகரஜோதி தரிசனத்தை யொட்டி சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும், சிறப்பு பஸ் வசதி உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News