ஆன்மிகம்
திருவந்திபுரம் தேவநாதசுவாமி பழ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

தேவநாத சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

Published On 2020-01-04 05:59 GMT   |   Update On 2020-01-04 05:59 GMT
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டிற்கான விழா கடந்த 27-ந்தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. விழாவின் 8-வது நாளான நேற்று காலையில் சாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

இதையடுத்து பல்வேறு வகையான பழங்கள் அலங்காரத்தில் தேவநாதசுவாமி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் பங்களா உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு வகையான பழங்களால் தேவநாதசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நாலாயிர திவ்யபிரபந்தம் வாசிக்கப்பட்டு, சாற்று முறை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் பத்து உற்சவம் முடிவடைகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள்(திங்கட்கிழமை) வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. பின்னர் காலை 5.30 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News