உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி

மதுரையில் ஒரே நாளில் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-12-05 03:27 GMT   |   Update On 2021-12-05 03:27 GMT
மதுரையில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 43 ஆயிரத்து 416 ஆக உள்ளது. நேற்றைய நிலவரப்படி 4 லட்சத்து 19 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மதுரை:

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்றும் தமிழகம் முழுவதும் ஏராளமான இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடந்தது.

மதுரை மாவட்டத்திலும் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்தது.

தேர்தல் வாக்குச்சாவடி மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஊரக, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதன்படி நேற்று சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தினர். இதுபோல், வீடு, வீடாக சென்றும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றது. மழையின் காரணமாக தடுப்பூசி போடும் பணியில் லேசான தொய்வும் இருந்தது. இருப்பினும் நேற்று ஒரே நாளில் 85 ஆயிரத்து 3 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றுடன் மதுரையில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 43 ஆயிரத்து 416 ஆக உள்ளது. நேற்றைய நிலவரப்படி 4 லட்சத்து 19 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News