உள்ளூர் செய்திகள்
மரத்தடியில் அமர்ந்திருக்கும் குழந்தைகள்.

குழந்தைகள் மைய கட்டிட பணி நிறுத்திவைப்பு- மரத்தடியில் பயிலும் சிறுவர்கள்

Published On 2022-05-06 07:55 GMT   |   Update On 2022-05-06 07:55 GMT
ஏத்தாப்பூரில் குழந்தைகள் மைய கட்டிட பணி நிறுத்திவைப்பு மரத்தடியில் மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் 4-வது வார்டு பகுதியில் ஏத்தாப்பூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மையம்  இயங்கி வருகிறது. இந்த மையத்தில் சுமார் 42 சிறு குழந்தைகள், மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

 கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரூ 1.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு ஒரு சில நாட்களிலேயே பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒப்பந்ததாரர் இந்த பணியை  இனிமேல் செய்ய முடியாது என சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மேற்கூரை தரைதளம் அனைத்தும் சேதம் அடைந்து காணப்படுகிறது. குழந்தைகள் கள் சாலையின் மரத்தடியில் அமர்ந்து பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது.

 இந்த நிலையை சீர்செய்து இந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் மையத்தினை கட்டிடத்தில் புதுப்பித்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

Similar News