செய்திகள்
வெண்டையம்பட்டி ஏரியில் நீர் நிரம்பி கடல் போல காட்சி அளிப்பதை காணலாம்

வெண்டையம்பட்டி பெரிய ஏரிக்கு 5 நாட்கள் தண்ணீர் திறப்பு- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2020-10-26 01:52 GMT   |   Update On 2020-10-26 01:52 GMT
உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் வெண்டையம்பட்டி பெரிய ஏரிக்கு 5 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கள்ளப்பெரம்பூர்:

தஞ்சை அருகே வெண்டயம்பட்டி புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால்களில் போதுமான தண்ணீர் தொடர்ந்து வழங்க கோரியும், தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகா பாசன பகுதிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறை நிர்வாகத்தை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் அனைத்து பாசன விவசாயிகள் சார்பில் கடந்த அக்டோபர் 15-ந் தேதி சானூரப்பட்டி, வளம்பக்குடி, புதுக்குடி ஆகிய இடங்களில் உள்ள திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கடந்த 14-ந் தேதி பூதலூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்திலையில் ஒப்பந்தப்படி முதல் முறையான வெண்டையம்பட்டி பெரிய ஏரிக்கு 5 நாட்கள் முழுமையாக தண்ணீர் வழங்கப்பட்டு முறை நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து தண்ணீர் நிரம்பிய ஏரியை பார்வையிட்ட விவசாயிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தண்ணீர் வழங்கிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
Tags:    

Similar News