செய்திகள்
அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டு வந்த போது எடுத்த படம்

நாகர்கோவிலுக்கு வள்ளியூரில் இருந்து ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 200 சிலிண்டர்கள் வந்தன

Published On 2021-06-10 18:27 GMT   |   Update On 2021-06-10 18:27 GMT
நாகர்கோவிலுக்கு வள்ளியூரில் இருந்து ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 200 சிலிண்டர்கள் வந்தன.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது சற்று குறைந்து வருகிறது. எனினும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோக தக்கலை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதே போல பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள ஆக்சிஜன் நிரப்பகத்தில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் குமரி மாவட்டத்துக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். பின்னர், எந்த ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுகிறதோ அந்த ஆஸ்பத்திரிக்கு சிலிண்டர்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வள்ளியூரில் இருந்து ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சுமார் 200 சிலிண்டர்கள் நேற்று டெம்போக்கள் மூலம் நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

அதன்பிறகு ஆக்சிஜன் தேவைப்படும் ஆஸ்பத்திரிகளுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டன. பெரும்பாலும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கே ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஏன் எனில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் நிரப்பகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News