செய்திகள்
வெடி விபத்து ஏற்பட்ட எண்ணெய்க்கப்பல்

ரஷியாவில் எண்ணெய்க் கப்பல் வெடித்து விபத்து- 3 பேர் பலி

Published On 2019-11-02 09:39 GMT   |   Update On 2019-11-02 09:39 GMT
ரஷிய கடல்பகுதியில் சென்று கொண்டிருந்த எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 3 மாலுமிகள் உயிரிழந்தனர்.
மாஸ்கோ:

ரஷியாவின் கிழக்கு தூர நகோட்கா விரிகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த சாலிவ் அமெரிக்கா எண்ணெய்க் கப்பலில் இன்று  பயங்கர சத்ததுடன் வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.  

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘நகோட்கா துறைமுகத்தின் நான்காவது பகுதியில் சென்று கொண்டிருந்த சாலிவ் அமெரிக்கா கப்பலின் ஐந்தாவது டேங்கரில் வெடி விபத்து ஏற்பட்டது. எரிவாயு மற்றும் காற்றுக் கலவை வெடித்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம். அதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் கப்பலின் 3 மாலுமிகள் உயிரிழந்தனர், என தெரிவித்தனர்.

உறைபனி நீரில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கப்பல் 2007ம் ஆண்டு தென் கொரியாவில் உள்ள ஹுண்டாய் கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. எண்ணெய் கொண்டு செல்ல பயன்படும் இந்த கப்பல் அமெரிக்காவில் உள்ள டெசோரோ தூர கிழக்கு கடல் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News