ஆட்டோமொபைல்
மாருதி எர்டிகா

மாருதி சுசுகியின் புதிய எம்.பி.வி. கார் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-07-11 09:28 GMT   |   Update On 2019-07-11 09:28 GMT
மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய எம்.பி.வி. காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய எம்.பி.வி. காரின் வெளியீட்டு விவரங்களை வெளியிட்டுள்ளது. புதிய பிரீமியம் மாருதி எம்.பி.வி. எர்டிகா மாடலை தழுவி உருவாகியிருக்கிறது. இந்த கார் நெக்சா விற்பனையகங்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் எர்டிகா சார்ந்து உருவாகியிருக்கும் புதிய எம்.பி.வி. கார் இந்தியாவில் ஆகஸ்டு 21 ஆம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த கார் எர்டிகா மாடலை போன்று ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாகும் என கூறப்படுகிறது.



புதிய பிரீமியம் எம்.பி.வி. கார் ஆறு பேர் அமரக்கூடியதாக உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. வடிவமைப்பை பொருத்தவரை இது எர்டிகா போன்று காட்சியளித்தாலும், பிரம்மாண்ட தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இது முற்றிலும் புதிய மாடலாக அறிமுகமாகிறது. இந்த கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. அந்த வகையில் இதன் விற்பனை அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. புதிய காரில் 1.5 லிட்டர் K15B சீரிஸ் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த என்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. புதிய கார் எஸ்-கிராஸ், பலேனோ மற்றும் இக்னிஸ் போன்ற மாடல்களுடன் நெச்கா விற்பனையகங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
Tags:    

Similar News