செய்திகள்
சுப்பராயன் எம்.பி.,

அனைத்து ரெயில்களும் திருப்பூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்-சுப்பராயன் எம்.பி., வலியுறுத்தல்

Published On 2021-11-21 07:09 GMT   |   Update On 2021-11-21 11:20 GMT
மாநகராட்சி மூலம் தினமும் ரெயில் நிலையத்திற்கு குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
திருப்பூர்:

ரெயில் பயணிகள் வசதிக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென திருப்பூர் எம்.பி.,சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தென்னக ரெயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பல்வேறு மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை தேடி திருப்பூர் வருகின்றனர். திருப்பூர் ரெயில் நிலைய 2-வது நடைமேடைக்கு செல்லும் வடக்கு நுழைவாயில் பகுதியை மேம்படுத்த வேண்டும். 

கூலிபாளையம் நிலையத்தில் கூடுதல் கிடங்குகள் அமைத்து சரக்கு பிரிவு அங்கு மாற்றப்பட வேண்டும். மாநகராட்சி மூலம் தினமும் ரெயில் நிலையத்திற்கு குடிநீர் வினியோகிக்க வேண்டும். பயணிகள் தங்கும் ‘டார்மிட்ரி’யும் அமைத்து, நவீன ரெயில் நிலையமாக மாற்றி கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் அமைத்து பிளாட் பார்ம்களை அகலப்படுத்த வேண்டும்.

வை-பை, ‘பயோ டாய்லெட்’, மருத்துவ வசதி, பிளாட்பார்ம்களில் எலக்ட்ரானிக் கோச் இன்டிகேட்டர்கள் நிறுவ வேண்டும். கோவை -திருப்பூர், ஈரோடு - சேலம் மாவட்டங்களுக்கு தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் இருந்து புதிய ரெயில்களை இயக்க வேண்டும். கோவை -நாகர்கோவிலுக்கு திருப்பூர் வழியாக கூடுதல் ரெயில் இயக்க வேண்டும். 

கேரளாவில் இருந்து செல்லும் 7 ரெயில்களும் திருப்பூரில் நின்று செல்ல வேண்டும். அனைத்து ரெயில்களும் திருப்பூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News