தொழில்நுட்பம்

பவர்பீட்ஸ் ப்ரோ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

Published On 2019-04-04 07:33 GMT   |   Update On 2019-04-04 07:33 GMT
ஆப்பிளின் பீட்ஸ் பிரிவு சார்பில் புதிய பவர்பீட்ஸ் ப்ரோ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #PowerBeatsPro

 

ஆப்பிளின் பீட்ஸ் பிரிவு பவர்பீட்ஸ் ப்ரோ எனும் வயர்லெஸ் இயர்பட்களை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் ஏர்பாட்ஸ் 2 சாதனத்தை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்சமயம் புதிய பவர்பீட்ஸ் ப்ரோ அறிமுகமாகி இருக்கிறது.

பவர்பீட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் இது ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. அறிமுகமாகும் முன் பவர்பீட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் புகைப்படங்கள் ஐ.ஓ.எஸ். 12.2 இயங்குதளத்தில் லீக் ஆகியிருந்தது.



புதிய பவர்பீட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் விலை 249.95 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.17,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதன் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் சர்வதேச வெளியீடு மற்றும் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

பவர்பீட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் ஐவரி, பிளாக், மோஸ் மற்றும் நேவி உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. புதிய பவர்பீட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் சிறப்பான ஆடியோ தரம், நாய்ஸ் ஐசோலேஷன் மற்றும் கிளாஸ் 1 ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்குகிறது. பவர்பீட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் ஆப்பிளின் ஹெச்.1 சிப்செட் கொண்டு இயங்குகிறது.

இத்துடன் ஹே சிரி (Hey Siri) வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 9 மணி நேர பேட்டரி பேக்கப் தவிர லைட்னிங் போர்ட் கொண்ட சார்ஜிங் கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. ஏர்பாட்ஸ் 2 மற்றும் புதிய பவர்பீட்ஸ் இயர்போன்களின் மிகப்பெரும் மாற்றம், புதிய பவர்பீட்ஸ் ப்ரோ கேஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கவில்லை என்பது தான்.
Tags:    

Similar News