செய்திகள்
ஸ்டீவ் ஸ்மித்

இரண்டு இன்னிங்சிலும் குறைவான ரன்: ஸ்மித் மோசமான சாதனை

Published On 2020-12-28 11:31 GMT   |   Update On 2020-12-28 11:31 GMT
ஆஸ்திரேலியாவின் ரன்மெஷின் என அழைக்கப்படும் ஸ்மித்தை இரண்டு இன்னிங்சிலும் இரட்டை இலக்க ரன்களை எடுக்கவிடாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் அசத்தினர்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஸ்டீவ் ஸ்மித்இந்திய பந்து வீச்சாளர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறினர். அதேபோல் மார்னஸ் லாபஸ்சேனும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக விளங்குவார் என்றனர்.

ஆனால் அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டுகளில் இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர். அடிலெய்டு முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருட்டினர். 2-வது இன்னிங்சில் இந்தியா 36 ரன்னில் சுருண்டதால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. முதல் இன்னிங்சில் அஸ்வின் 
ஸ்மித்
தை 1 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது இன்னிங்சில் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மெல்போர்னில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அஸ்வின் பந்தில் ஸ்மித் டக்அவுட் ஆனார். 2-வது இன்னிங்சில. 8 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.

அவர் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 9 ரன்களே எடுத்தார். இதன்மூலம் ஒரு டெஸ்டில் மிகவும் குறைவாக ரன்கள் எடுத்த வரிசையில் ஸ்மித்தின் 2-வது மோசமான சாதனை இதுவாகும்.

இதற்கு முன் 2013-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் முதல் இன்னிங்சில் 2 ரன்னும், முதல் இன்னிங்சில் 1 ரன்னும் எடுத்திருந்தார். இதுதான் மிகவும் குறைந்த ஸ்கோராக உள்ளது. அதன்பின் தற்போது இந்தியாவுக்கு எதிராக 0, 8 என குறைந்த ரன்னில் அவுட்டாகியுள்ளார்.

2015-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக டிரென்ட் பிரிட்ஜ் போட்டியில் 6, 5 ரன்களும், 2017-18-ல் தென்ஆப்பிரிக்காவுக்கு ஏதிராக கேப்டவுனில் 5 மற்றும் 7 ரன்கள் அடித்துள்ளார்.
Tags:    

Similar News