உள்ளூர் செய்திகள்
குடியாத்தத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா நெசவாளர் அணியினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

வீடுகளை அகற்றி மாற்று இடம் வழங்காததை கண்டித்து பா.ஜ.க. போராட்டம்

Published On 2022-01-26 09:34 GMT   |   Update On 2022-01-26 09:34 GMT
குடியாத்தத்தில் வீடுகளை அகற்றி மாற்று இடம் வழங்காததை கண்டித்து பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்ட நெசவாளர் பிரிவு சார்பில் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெசவாளர் பிரிவு வேலூர் மாவட்ட தலைவர் என்.ராஜசெல்வேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கே.சண்முகராஜ், மாநில நெசவாளர் பிரிவு தலைவர் கே.எஸ்.பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நெசவு மற்றும் பின்னலாடை தொழிலுக்கு தேவையான நூல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்தும்.

நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டியுள்ள வீடுகளை அகற்றும் தமிழக அரசை கால அவகாசம் கேட்டும் மற்றும் மாற்று இடம் வழங்காததை கண்டித்தும்.

வீடு இழந்த மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட பவுனம் மாள் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, குடியாத்தம் பகுதியில் புறவழிச்சாலை விரைவாக அமைக்க வேண்டும்.

மற்ற மாநிலங்களை விட இருமடங்காக இருக்கும் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

கடந்த 3 மாதகாலமாக குடிநீர் தட்டுப்பாடு உள்ள குடியாத்தம் மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விரைவாக வழங்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News