ஆட்டோமொபைல்
ஆடி எஸ்.கியூ.7

அதிநவீன அம்சங்கள் நிறைந்த ஆடி எஸ்.கியூ7

Published On 2019-08-05 07:41 GMT   |   Update On 2019-08-05 07:41 GMT
ஆடி நிறுவனத்தின் 2020 எஸ்.கியூ.7 ஃபேஸ்லிஃப்ட் காரின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சொகுசு ரக கார்களுக்கு பிரபலமான ஆடி நிறுவனம் அதன் எஸ்.கியூ7 காரில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களை சேர்த்து அறிமுகம் செய்துள்ளது. 2020 ஆடி எஸ்.கியூ.7 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆடி எஸ்.கியூ.7 காரின் முன்புறம் பெரிய சிங்கிள் ஃபிரேம் கிரில், வெர்டிக்கல் ஸ்லேட்களை கொண்டிருக்கிறது. இதன் எல்.இ.டி. ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட்கள் மேம்படுத்தப்பட்டு புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டெயில்கேட் மாற்றப்பட்டுள்ளது.

புதிய காரில் 435 பி.ஹெச்.பி. டர்போ சார்ஜ்டு வி8 டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த கார் ஏழு பேர் சவுகரியமாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 4 லிட்டர் டர்போ வி8 ரக டீசல் என்ஜின் உள்ளது.



இந்த என்ஜின் 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை திறனை கொண்டது. வண்டியை ஸ்டார்ட் செய்து 4.8 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தைத் தொட்டுவிடும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீ்ட்டர் வேகத்தை எட்டக்கூடியது.

இதில் நான்கு சக்கரங்களும் (4 வீல் டிரைவ்) சுழற்சி விசையைக் கொண்டது. அனைத்து சக்கரங்களும் டிஸ்க் பிரேக்கை கொண்டவை. இப்போது இந்த மாடல் கார்கள் வெளிநாடுகளில் மட்டும் கிடைக்கிறது. இந்த மாடல் கார் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஆடி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Tags:    

Similar News