செய்திகள்
திருட்டு

அரூர் அருகே ஜவுளி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை திருட்டு

Published On 2019-11-12 13:01 GMT   |   Update On 2019-11-12 13:01 GMT
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஜவுளி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அப்பகுதியில் நடக்கும் தொடர் சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பளைய பட்டிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 63). இவர் கோபிநாதம்பட்டி கூட்டோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் சேகர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் மதியம் ஒரு மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு கோபிநாதம்பட்டியில் உள்ள ஜவுளிக் கடைக்கு சென்றனர்.

பின்னர், இரவு சுமார் 9 1/2  மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பினர். அப்போது அவர்கள் வீட்டிற்கு வந்துபார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் வீட்டினுள் சென்றுபார்த்தனர். அப்போது வீட்டினுள் இருந்த பீரோ திறக்கப்பட்ட நிலையில் பொருட்கள், துணிகள் அனைத்தும் சிதறிக்கிடந்தது. மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து 13 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சேகர் கோபிநாதம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில், கோபிநாதம்பட்டி இன்ஸ் பெக்டர் முரளி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த சில மாதங்களாகவே அரூர் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. தற்போது நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் அரூர் பகுதியில் அரங்கேறியுள்ள மூன்றாவது திருட்டாகும். மேலும், இப்பகுதியில் மாதத்திற்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட செல்போன்களும் திருட்டு போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே உள்ளனர்.
எனவே, போலீசார் திருட்டு சம்பவங்களை குறைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News