அழகுக் குறிப்புகள்
முகப்பரு

முகப்பருவிற்கு நிரந்தர தீர்வு தரும் பேஸ் பேக்

Published On 2022-04-01 04:34 GMT   |   Update On 2022-04-01 04:34 GMT
பெண்களுக்கு மிகவும் எரிச்சலூட்டும் ஒரு விஷயம் முகப்பருக்கள். இந்த முகப்பருக்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தரும் இயற்கை வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
மஞ்சள் மற்றும் தயிர்

மஞ்சள், தயிர் இரண்டுமே மருத்துவ மற்றும் காயங்களை குணமாக்கும் தன்மைகள் உடையது. அவை பருக்களை விரட்டி தூய்மையான சருமத்தை அளிக்கும். இதை உபயோகிக்கும் முறை :

இரண்டையும் குழைத்து பேஸ்ட் ஆக்கவும். முகத்தில் சமமாக பூசவும். 15-20 நிமிடங்கள் கழித்து, கழுவவும்.

சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் பேஸ்ட்

சந்தனத்திற்கு வலியை குறைக்கும் தன்மையும் பரு மற்றும் மாசுவை நீக்கும் சக்தியும் உண்டு. அதை பின் வருமாறு உபயோகிக்கவும்:

சந்தனப்பொடியுடன் ரோஸ் வாட்டருடன் கலந்து குழைக்கவும். உங்கள் நெற்றி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.

வேப்பிலை


வேப்பிலை உங்களுக்கு தூய்மையான, அப்பழுக்கற்ற சருமத்தை அளிக்கக் கூடிய ஒரு மிகச் சிறந்த கிருமி நாசினி. அதை உபயோகிக்கும் முறை:

சில வேப்பிலைகளை எடுத்து நன்கு கழுவவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் அந்த இலைகளைப் போட்டு, அடுப்பை லேசாக எரிய விட்டு சில நிமிடங்கள் கொதிக்கவிடவும். அந்த நீரின் நிறம் மாறத் தொடங்கும் பொழுது அடுப்பை அணைத்து விடவும். அந்த நீரை ஆற விடவும் பின் வடிகட்டி அந்த நீரில் தினமும் முகத்தை கழுவவும்.
Tags:    

Similar News