செய்திகள்
லல்லு பிரசாத் யாதவ்

தொடர்ந்து 11-வது முறையாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவராக லாலு பிரசாத் தேர்வு

Published On 2019-12-03 09:43 GMT   |   Update On 2019-12-03 09:47 GMT
பீகார் மாநிலத்தில் முக்கிய கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் பதவிக்கு தொடர்ந்து 11-வது முறையாக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாட்னா:

பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றார். இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

பீகாரில் முக்கிய கட்சியாக திகழும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட, தற்போதைய தலைவராக உள்ள முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் மட்டுமே மனுதாக்கல் செய்திருந்தார்.
 
இந்நிலையில், தலைவர் பதவிக்கு லாலு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக உள்கட்சி தேர்தல் அதிகாரி இன்று அறிவித்துள்ளார். தொடர்ந்து 11-வது முறையாக லல்லு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1997-ம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்டபோது லாலு பிரசாத் யாதவ் தலைவராக முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
Tags:    

Similar News