லைஃப்ஸ்டைல்
இசையை கேட்டுக்கொண்டே தியானம் செய்யலாமா?

இசையை கேட்டுக்கொண்டே தியானம் செய்யலாமா?

Published On 2021-02-04 02:17 GMT   |   Update On 2021-02-04 02:17 GMT
மனதை ஒருமுகப்படுத்தும், இனிமையான இசையை உள்வாங்கியபடி தியானிக்கும்போது அது மன அமைதியை தரும். மென்மையான இசை நிதானமான, இதமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும்.
தியானம் செய்யும்போது இசை கேட்பது மன ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இசையை கேட்டுக்கொண்டே தியானம் செய்தால் கவனச்சிதறல் ஏற்படும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அதற்கு மாறாக, இசையை கேட்கும்போது உடலும், மனமும் தளர்வடையும், அதன் மூலம் மன ஆரோக்கியமும் மேம்படும் என்பதை ஆய்வு முடிவு சுட்டிக்காட்டுகிறது. அதேவேளையில் வேகமான உச்சரிப்பை கொண்ட பாடல்கள், குத்து பாடல்கள், ஹிப்-ஹாப் பாடல்கள் போன்றவற்றை கேட்டுக்கொண்டு தியானிப்பது சரியல்ல. மென்மையான இசையை வெளிப்படுத்தும் பாடல்களே தியானத்தை மேம்படுத்தும். மனதை ஒருமுகப்படுத்தும், இனிமையான இசையை உள்வாங்கியபடி தியானிக்கும்போது அது மன அமைதியை தரும். மென்மையான இசை நிதானமான, இதமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும்.

* தியானத்தில் இசையை கேட்கும்போது கவனம் முழுவதும் ஒரே புள்ளியில் குவிந்து மனம் ஒரு நிலைப்படும். மேலும் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைப்பதற்கு இசை கைகொடுக்கும்.

* தியானத்தின்போது இசையை கேட்பது உடல் இயக்க திறனை மேம்படுத்த உதவும். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் மென்மையான இசையை கேட்டுக்கொண்டே தியானத்தில் ஈடுபட்டு வரலாம். உணவு கட்டுப்பாட்டுக்கும் தியானம் கைகொடுக்கும்.

* உடல் நல பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் இசையை கேட்பது விரைவில் பூரண குணமடைய வழிவகுக்கும். அறுவை சிகிச்சை போன்ற கடினமான சிகிச்சை களுக்கு பிறகு இசையுடன் தியானத்தில் ஈடுபடுவது உடல் இயக்க செயல்பாட்டை மேம்படுத்தும். அதனால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

* தியானிக்கும்போது இசை கேட்பது உணர்ச்சிகளை சமநிலைப்படுத்த உதவும். மனதளவில் பாதிப்புக்குள்ளாகி இருந்தால் அதிலிருந்து விடுபட்டு சீரான மன நிலைக்கு வந்துவிட முடியும்.

* நிறைய பேர் பயணங்களின்போது இசையை கேட்கவிரும்புவார்கள். அது மனதை அமைதியாகவும், பயணத்தை இனிமையாகவும் மாற்ற உதவும். விமானத்தில் பயணிக்கும்போது மனதை ஒரு நிலைப்படுத்தி இசை கேட்பது மனதுக்கு இதமளிக்கும்.
Tags:    

Similar News