செய்திகள்

உ.பி.யில் புழுதிப்புயல் மற்றும் மின்னல் தாக்கி 19 பேர் பலி

Published On 2019-06-07 07:45 GMT   |   Update On 2019-06-07 07:45 GMT
உத்தரபிரதேசத்தில் புழுதிப்புயல் மற்றும் மின்னல் தாக்கியதால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
லக்னோ: 

உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை புழுதிப்புயல் வீசியது. இந்த புழுதிப்புயலால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மின்கம்பங்கள் சேதமடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புழுதிப்புயல் மற்றும் மின்னல் தாக்கியதால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 48 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இதில் மணிபுரி பகுதியில் 6 பேரும், எட்டா மற்றும் கஸ்கஞ் பகுதியில் தலா 3 பேரும், மொராதாபாத், பாடவுன், பிலிபிட், மதுரா, கண்னுஜ், சம்பால், மற்றும் காசிதாபாத் பகுதியில் தலா ஒருவரும் பலியானதாக உத்தரபிரதேச நிவாரண ஆணையர் தெரிவித்தார். மணிபுரியில் மட்டும் 41 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த புழுதிப்புயலில் சிக்கி 8 கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள அம்மாநில அமைச்சர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News