ஆட்டோமொபைல்
ஹூண்டாய் அல்காசர்

சென்னை ஆலையில் ஒரு கோடியாவது காரை வெளியிட்ட ஹூண்டாய்

Published On 2021-07-01 09:01 GMT   |   Update On 2021-07-01 09:01 GMT
ஹூண்டாய் நிறுவனம் வாகனங்கள் உற்பத்தியில் புது மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஹூண்டாய் நிறுவனம் தனது சென்னை ஆலையில் இருந்து ஒரு கோடியாவது யூனிட்டை வெளியிட்டுள்ளது. ஒரு கோடியாவது யூனிட் ஹூண்டாய் நிறுவனத்தின் அல்காசர் மாடலாக வெளியாகி இருக்கிறது. சென்னை ஆலையில் ஹூண்டாய் உற்பத்தி பணிகள் 1998 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 



இந்த நிலையில், உற்பத்தியில் ஒரு கோடி யூனிட்களை கடக்க 23 ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளது. புது மைல்கல் எட்டியதை கொண்டாடும் வகையில் ஒரு கோடியாவது யூனிட்டை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். தென் கொரியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஹூண்டாய் இந்தியாவின் முன்னணி வாகன ஏற்றுமதியாளராக இருக்கிறது.

இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான புதிய ஹூண்டாய் அல்காசர் மாடல் இதுவரை 4 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்துள்ளது. கிரெட்டா மாடலை போன்றே புதிய அல்காசர் மாடலும் வெற்றி பெறும் என ஹூண்டாய் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News