செய்திகள்
கொரோனா வைரஸ்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா

Published On 2021-04-30 02:46 GMT   |   Update On 2021-04-30 02:46 GMT
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள், தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
வள்ளியூர்:

நெல்லையில் வள்ளியூர் மற்றும் ராதாபுரம் வட்டார பகுதிகளில் தற்போது 2-ம் கட்ட கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று வள்ளியூர், ராதாபுரம் வட்டாரத்தில் புதிதாக 104 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது அங்கு மேலும் 51 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுக்கு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர காவல்கிணற்றில் 9 பேர், வள்ளியூரில் 8 பேர், வடக்கன்குளம், கண்ணன்குளம், பணகுடியில் தலா 4 பேர், செட்டிகுளம், புதியம்புத்தூர், தெற்குகள்ளிகுளத்தில் தலா 3 பேர் என பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

கொரோனா பாதிப்பு பகுதிகளில் சுகாதார பணிகளை சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News