தொழில்நுட்பம்
நோக்கியா 7.2 லீக்

வெளியீட்டிற்கு முன் இணையத்தில் லீக் ஆன நோக்கியா ஸ்மார்ட்போன்

Published On 2019-08-11 04:37 GMT   |   Update On 2019-08-11 04:37 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் விரைவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், நோக்கியா ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. ரேம், ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் பெர்லினில் நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. 2019 விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஹெச்.எம்.டி. குளோபல் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தது. ஐ.எஃப்.ஏ. விழாவில் நோக்கியா முதல் முறையாக தனது சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவ்விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீக்பென்ச் தகவல்களின் படி நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் 1.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், 6 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 அல்லது ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கிறது. இது கீக்பென்ச் சோதனையில் சிங்கில் கோரில் 1604 புள்ளிகளையும், மல்டி கோரில் 5821 புள்ளிகளை பெற்றிருக்கிறது. நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் ஸ்டார் லார்டு எனும் குறியீட்டு பெயரில் உருவாகிறது.

இதில் 6.18 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் ஹெச்.டி.ஆர். 10 டிஸ்ப்ளே, யு-வடிவம் கொண்ட வாட்டர் டிராப் நாட்ச் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம் + 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இத்துடன் புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா, 48 எம்.பி. மெயின் சென்சார் வழங்கப்படுகிறது. மற்ற கேமரா சென்சார்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை. நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் குவால்காம் குவிக் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி: nokiapoweruser
Tags:    

Similar News