விளையாட்டு
அஷ்வின்

நடப்பு ஆண்டில் 50க்கும் அதிகமான விக்கெட்டுகள் - அஷ்வின் அசத்தல் சாதனை

Published On 2021-12-05 20:42 GMT   |   Update On 2021-12-05 20:42 GMT
நடப்பு ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய முதல் 10 வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் அக்‌சர் படேல் 4வது இடத்திலும், முகமது சிராஜ் 9வது இடத்திலும் உள்ளனர்.
மும்பை:

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 540 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து அணியின் முக்கியமான 3 விக்கெட்டுகளையும் இந்திய பந்துவீச்சாளர் அஷ்வின் வீழ்த்தினார். இதன்மூலம் நடப்பு ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 50க்கும் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அஷ்வின் 81 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 426 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

அஷ்வின் நடப்பு ஆண்டில் 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இதுவரை 51 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி 44 விக்கெட்டுகளுடனும், 3வது இடத்தில் பாகிஸ்தானின் ஹசன் அலி 39 விக்கெட்டுகளுடனும் நீடிக்கின்றனர்.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஷ்வின் 12-வது இடத்தில் உள்ளார்.

Tags:    

Similar News