ஆன்மிகம்
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் சஷ்டி மண்டபத்தில் நடைபெற்றது.

சோலை மலையில் முருகன் கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2021-11-10 07:40 GMT   |   Update On 2021-11-10 07:40 GMT
இன்று (புதன் கிழமை) காலை சஷ்டி மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் காட்சியளித்தார்.
மதுரை மாவட்டம், அழகர் மலையில் உள்ள 6-வது படைவீடான பழமுதிர்ச்சோலை சோலைமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதில் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி திருக்கோவிலின் ஈசான திக்கில் கஜமுகாசுரனையும், அக்கினி திக்கில் சிங்க முகாசுரனையும் சம்ஹாரம் செய்தார்.

ஸ்தல விருட்சமான நாவல் மரம் அருகில் பத்மா சூரனையும் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சூரசம்ஹார நிகழ்ச்சிகள் முடிந்து சுவாமி இருப்பிடம் சென்ற பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு சாந்த அபிஷேகமும் சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது. இன்று (புதன் கிழமை) காலை சஷ்டி மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் காட்சியளித்தார்.

திருக்கல்யாணத்தை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
Tags:    

Similar News