ஆன்மிகம்
ராமநாதபுரம் கன்னிகாபரமேசுவரி கோவிலில் தன்வந்தரி மகா யாகம் நடத்தப்பட்டபோது எடுத்தபடம்.

ராமநாதபுரம் கன்னிகா பரமேசுவரி கோவிலில் தன்வந்தரி யாகம்

Published On 2021-05-08 07:59 GMT   |   Update On 2021-05-08 07:59 GMT
தன்வந்தரி பகவானை அவருக்குரிய மூல மந்திரங்களை முழங்கி மூலிகைகளை கொண்டு யாகம் செய்தால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் நொடி நீங்குவதோடு நோயின் தீவிரம் குறைந்து உடல்நலம் பாதுகாக்கப்படும் என்ற நம்பப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா முதல் பரவலை விட தற்போது 2-வது அலை பரவல் மிகவேகமாக பரவி வருகிறது. நாள் தோறும் ஏராளமானோர் பாதிக்கப்படுவதோடு பலர் பலியாகி வருகின்றனர். தொடர்ந்து ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதால் நோயில் இருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் ராமநாதபுரம் கன்னிகாபரமேசுவரி ஆலயத்தில் மக்கள் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து காக்க வேண்டிய தன்வந்தரி மகா யாகம் நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் வர தடைவிதிக்கப்பட்டு அதிகாலை 4 மணிக்கு ரமேஷ்குருக்கள் தலைமையில் ஏராளமான வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு விதமான மூலிகைகளை கொண்டு இந்த யாகம் நடைபெற்றது. தன்வந்தரி பகவானை அவருக்குரிய மூல மந்திரங்களை முழங்கி மூலிகைகளை கொண்டு யாகம் செய்தால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் நொடி நீங்குவதோடு நோயின் தீவிரம் குறைந்து உடல்நலம் பாதுகாக்கப்படும் என்ற நம்பப்படுகிறது.

இதன்காரணமாக மக்களை கொரோனாவில் இருந்து காக்க இந்த தன்வந்தரி மகா யாகம் நடத்தப்பட்டதாக வேதவிற்பன்னர்கள் தெரிவித்தனர். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் சிவாச்சாரியார்கள் மட்டும் இந்த யாகத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து கொரோனா நோய் தொற்றில் இருந்து பொதுமக்களை காக்க கன்னிகா பரமேசுவரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
Tags:    

Similar News