செய்திகள்
இங்கிலாந்து எம்.பி.க்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி

தமிழகம் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடியாக உள்ளது - முதல்வர் பழனிசாமி

Published On 2019-08-30 10:08 GMT   |   Update On 2019-08-30 10:08 GMT
மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என இங்கிலாந்து எம்.பி.க்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
லண்டன்:

இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் அந்நாட்டு எம்.பி.க்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவில் சிறந்த மருத்துவர்களையும் செவிலியர்களையும்  கொண்ட மாநிலமாக  தமிழகம் திகழ்கிறது. ஆயிரக்கணக்கான மருத்துவமனைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறோம். ஒரு கோடியே 58 லட்சம்  குடும்பங்களுக்கு மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 107 நோய்களுக்கு சிகிச்சை பெறமுடியும். 

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது. தமிழகத்தில் குழந்தைகள் பிறப்பது மருத்துவமனைகளிலே உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ தொழில்நுட்பங்களை தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம் என தெரிவித்தார்.
Tags:    

Similar News