தொழில்நுட்பம்

ரூ.195 விலையில் தினமும் 1.25 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்

Published On 2018-09-26 05:21 GMT   |   Update On 2018-09-26 05:21 GMT
ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்தது. புதிய சலுகையின் படி பயனர்களுக்கு தினமும் 1.25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. #Airtel4G

 

ஏர்டெல் நிறுவன பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.195 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.25 ஜிபி 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

எனினும் இந்த சலுகையில் எஸ்.எம்.எஸ். சலுகை வழங்கப்படவில்லை. கூடுதலாக, இந்த சலுகை முதற்கட்டமாக சில வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த சலுகை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் உள்ள ஏர்டெல் வலைதளங்களில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 

கேரளா வட்டாரங்களிலும் இந்த சலுகை வலைதளத்தில் மட்டுமே பதிவிடப்பட்டு இருப்பதாகவும், மைஏர்டெல் செயலியில் இதுவரை அப்டேட் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. புதிய ஏர்டெல் சலுகை இந்தியாவின் மற்ற வட்டாரங்களிலும் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

கடந்த வாரம் ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.168 விலையில் புதிய சலுகை தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்பட்டது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜிபி 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்.  உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்பட்டது.

ரூ.195 ஏர்டெல் சலுகை அதிக டேட்டா விரும்பும் பயனர்களுக்கு ஏற்றதாக இருக்கும் நிலையில், ரூ.168 சலுகையை அதிக எஸ்.எம்.எஸ். அனுப்பும் பயனர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.

ஏர்டெல் ரூ.195 சலுகையை விட ஜியோ சலுகையில் அதிக பலன்கள் வழங்கப்படுகிறது. ஜியோவின் ரூ.198 பிரீபெயிட் சலுகையில் 2 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்த இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. #Airtel4G #Offers
Tags:    

Similar News