வழிபாடு
நீலிமலை-அப்பச்சி மேடு பாதை வழியாக மலை ஏறி சென்ற பக்தர்களை படத்தில் காணலாம்.

நீலிமலை பாதை வழியாக சென்று சபரிமலையில் தரிசனம் செய்த பக்தர்கள்

Published On 2021-12-13 07:44 GMT   |   Update On 2021-12-13 07:44 GMT
பம்பையில் இருந்து நேற்று முதல் நீலிமலை பாதை வழியாக சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் பயபக்தியுடன் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பம்பையில் இருந்து பாரம்பரிய பாதையான நீலிமலை-அப்பச்சிமேடு வழியாக செல்வது வழக்கம். கேரளாவில் பெய்த கனமழையால் இந்த பாதை மிகவும் சேதமடைந்து பக்தர்கள் செல்ல முடியாத நிலையில் காணப்பட்டது. இதையடுத்து இந்த பாதை மூடப்பட்டது.

இதனால் ஐயப்ப பக்தர்கள் பம்பையில் இருந்து சாமி ஐயப்பன் ரோடு வழியாக சபரிமலை சென்று வந்தனர். இந்த பாதை வழியாக சபரிமலைக்கு செல்லும் டிராக்டர் போன்ற வாகனங்களும் செல்வதால் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் பம்பை - சபரிமலை இடையேயான பாரம்பரிய நீலிமலை-அப்பச்சி மேடு மலை ஏற்ற பாதையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தது.

இதையடுத்து நேற்று முதல் நீலிமலை-அப்பச்சிமேடு பாதை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அந்த பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News