உள்ளூர் செய்திகள்
,

ரெயில்வே தேர்வு எழுதும் மாணவர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கம்

Published On 2022-05-07 10:20 GMT   |   Update On 2022-05-07 10:20 GMT
ரெயில்வே தேர்வு எழுதும் மாணவர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுறது.
சேலம்:

ரெயில்வே தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. இதையொட்டி நெல்லை-மைசூரு இடையே சிறப்பு ரெயிலை இயக்குகிறது. 

அதன்படி நெல்லை- மைசூரு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06039), இன்று (சனிக்கிழமை) நெல்லையில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், கொல்லம், காயன்குளம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் மதியம் 12 மணிக்கு சேலம் வந்தடையும். 

பின்னர் இங்கிருந்து 12.03 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு வழியாக இரவு 11.55 மணிக்கு மைசூரு சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கத்தில் மைசூரு- நெல்லை சிறப்பு ரெயில் (06040) மைசூரிலிருந்து வருகிற 10-ந் தேதி இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு வழியாக மறுநாள் காலை 5.30 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து காலை 5.33 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, கோவை, பாலக்காடு வழியாக இரவு 9.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

மச்சிலிப்பட்டணம்-எர்ணாகுளம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07674) மச்சிலிப்பட்டணத்தில் இருந்து இன்று மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு விஜயவாடா, திருப்பதி, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 7.25 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து 7.28 மணிக்கு புறப்பட்டு கோவை, பாலக்காடு, வழியாக மதியம் 3.30 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்,

இதேபோல் மறுமார்க்கத்தில் எர்ணாகுளம்- மச்சிலிப்பட்டணம் சிறப்பு ரயில் (07675) எர்ணாகுளத்தில் இருந்து நாளைமறுநாள் (திங்கட்கிழமை) இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.09 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து 5.12 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மச்சிலிப்பட்டணம் சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகா–ரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News