செய்திகள்
விவசாயிகள் போராட்டம் (கோப்பு படம்)

வேளாண் சட்டங்கள் வாபஸ்- பிரதமர் அறிவித்த பிறகும் போராட்டக் களத்தை காலி செய்ய மறுக்கும் விவசாயிகள்

Published On 2021-11-19 10:49 GMT   |   Update On 2021-11-19 14:02 GMT
வேளாண் சட்டங்களை பாராளுன்றம் ரத்து செய்யும்வரை போராட்டத்தை தொடர விவசாயிகளில் ஒரு குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்திருப்பதாகவும், வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இதற்கான நடைமுறைகள் தொடங்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மோடியின் அறிவிப்பையடுத்து விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். போராட்டக்களங்களில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாய சங்க நிர்வாகிகள் உற்சாகத்தில் நடனமாடினர். பெரும்பாலான போராட்டக்காரர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்ப முடிவு செய்துள்ளனர்.

எனினும், ஒருசில விவசாயிகள் தொடர்ந்து அங்கு முகாமிட்டு போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர். வேளாண் சட்டங்களை பாராளுன்றம் ரத்து செய்யும்வரை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். வேளாண் சட்டங்கள் தவிர மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

போராட்டம் இன்னும் முடிவடையவில்லை, ஒரு வருடமாக தங்களின் இல்லமாக மாறிய போராட்ட களங்கள் காலி செய்யப்படாது என விவசாயிகள் சிலர் கூறுகின்றனர். சட்டத்தை முறைப்படி ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என ஹர்தீப் சிங் என்ற போராட்டக்காரர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News