செய்திகள்
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் - இந்திய அணி வீரர்கள்

இந்தியா - வெஸ்ட்இண்டீஸ்: 20 ஓவர் போட்டி கண்ணோட்டம்

Published On 2019-12-05 07:02 GMT   |   Update On 2019-12-05 07:02 GMT
இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் 20 ஓவர் போட்டியில் மோதியது குறித்து சில தகவல்களை காணலாம்.
இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே நான்கு 20 ஓவர் போட்டி தொடர் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 3 முறையும், வெஸ்ட்இண்டீஸ் ஒரு தடவையும் தொடரை கைப்பற்றி உள்ளன.

இரு அணிகளும் 14 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் இந்தியா-8-ல், வெஸ்ட்இண்டீஸ்-5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு இல்லை.

இந்திய அணி 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். அதே மைதானத்தில் வெஸ்ட்இண்டீஸ் 245 ரன் எடுத்து இருந்தது.

இந்திய அணி 153 ரன் எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். வெஸ்ட்இண்டீஸ் அணி கடந்த ஆகஸ்ட் மாதம் லாடர்ஹில் மைதானத்தில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்னே எடுத்து இருந்தது.

ரோகித்சர்மா 12 இன்னிங்சில் 425 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். 3 ஆட்டத்தில் ‘அவுட்’ ஆகாததால் அவரது சராசரி 47.22 ஆகும். ஒரு சதமும், 3 அரைசதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 111 ரன் குவித்துள்ளார். விராட்கோலி 3 அரைசதத்துடன் 318 ரன்னும், லீவிஸ் 242 ரன்னும் எடுத்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

லீவிஸ் 125 ரன் குவித்ததே ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர்ஆகும்.

பும்ரா அதிகபட்சமாக 5 ஆட்டத்தில் 8 விக்கெட் வீழ்த்தி உள்ளார். ஜடேஜா, பிராவோ, தாமஸ் தலா 7 விக்கெட் கைப்பற்றி உள்ளனர். டாரன்சேமி 16 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சு ஆகும்.
Tags:    

Similar News