செய்திகள்
வாக்கு நிலவரம்

தமிழக சட்டசபை தேர்தல்- 11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2021-04-06 06:35 GMT   |   Update On 2021-04-06 08:01 GMT
தமிழக சட்டசபை தேர்தலில் 11 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 28.33 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்காளர்கள் ஓட்டு போடலாம்.

காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.



இந்நிலையில்  தமிழக சட்டசபை தேர்தலில் 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:

* தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

* தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 28.33 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

* தமிழகத்தில் குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 20.98  சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

* சென்னையில்  காலை 11 மணி நிலவரப்படி 23.67 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News