ஆட்டோமொபைல்
கனெக்ட்டெட் வாகன தொழில்நுட்பம்

கனெக்ட்டெட் வாகன தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஃபோர்டு

Published On 2019-07-05 09:03 GMT   |   Update On 2019-07-05 09:03 GMT
ஃபோர்டு மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைந்து கனெக்ட்டெட் வாகன தொழில்நுட்பத்தை சோதனை செய்ய துவங்கியுள்ளன.



ஃபோர்டு மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைந்து கனெக்ட்டெட் வாகன தொழில்நுட்பத்தை சோதனை செய்து வருகின்றன. இவை நகரங்களில் பார்க்கிங் இடங்களை கண்டறியும் வழியை எளிமையாக்கும். இதற்கு பார்க்கிங் ஸ்பேஸ் கைடன்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

பார்க்கிங் ஸ்பேஸ் கைடன்ஸ் ரியல்-டைமில் கார் பார்க் டேட்டாவை அப்டேட் செய்யும். இதனை ஃபோர்டு மற்றும் வோடபோன் நிறுவனங்கள் சோதனை செய்கின்றன. ஜெர்மனியில் இந்த தொழில்நுட்பத்துக்கான சோதனை நடைபெறுகிறது. சோதனை வாகனங்கள் நகரங்களில் செல்லும் போது, அவற்றுக்கு சாலைகளின் நிலவரம் மற்றும் கார் பார்க் விவரங்கள் கணினியில் இருந்து அனுப்பப்படும்.



இத்தவிர போக்குவரத்து சிக்னல் அசிஸ்டண்ஸ் சிஸ்டமும் வழஹ்கப்படுகிறது. இது சிக்னலில் இருக்கும் சிவப்பு மற்றும் பச்சனை நிற விளக்கு எத்தனை நேரம் இருக்கும் என்பதை டிஸ்ப்ளேவில் காண்பிக்கும். இரு நிறுவனங்களும் டிராஃபிக் கண்ட்ரோல் சிஸ்டம்களை சோதனை செய்து, சாலைகளில் வேக கட்டுப்பாட்டு அளவுகளை நிர்ணயிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

தற்போதைய வாகனங்களில் போக்குவரத்து சிக்னல்களை கேமராக்கள் மூலம் கண்டறிந்து கொள்ளும் முறை வழங்கப்படுகின்றன. எனினும், மோசமான வானிலைகளில் இவை சீராக இயங்காத நிலை நிலவுகிறது. வாகனத்துக்கு தேவையான விவரங்களை செல்லுலார் இணைப்பில் வழங்கும் போது முக்கிய விவரங்களை சீராக வழங்க முடியும்.
Tags:    

Similar News