ஆட்டோமொபைல்
ஜாகுவார் ஐ பேஸ்

பிரீமியம் விலையில் புது ஜாகுவார் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-03-23 07:35 GMT   |   Update On 2021-03-23 07:35 GMT
ஜாகுவார் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


ஜாகுவார் நிறுவனம் இந்திய சந்தையில் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஐ பேஸ் மாடல் S, SE மற்றும் HSE என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய ஐ பேஸ் மாடல் 19 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட்கள், கிளாஸ் ரூப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் டூயல் தொடுதிரை வசதி கொண்டு இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, இன்கண்ட்ரோல் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.



ஜாகுவார் ஐ பேஸ் HSE மாடலில் அடாப்டிவ் மேட்ரிஸ் எல்இடி ஹெட்லைட்கள், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, விண்ட்சர் லெதர் ஸ்போர்ட் சீட், 16 ஸ்பீக்கர், 825 வாட் மெர்டியன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் ஐ பேஸ் மாடல் இருவித எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை 400 பிஹெச்பி பவர், 696 என்எம் டார்க் திறன் வழங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.

புதிய ஜாகுவார் எலெக்ட்ரிக் கார் 90kWh பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 470 கிலோமீட்டர் வரை செல்கிறது. ஜாகுவார் ஐ பேஸ் மாடல் துவக்க விலை ரூ. 1.06 கோடி ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.12 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News