செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி போட்டும் கொரோனா தாக்கியவர்களில் டெல்டா வைரஸ் ஆதிக்கம்- பரபரப்பு தகவல்

Published On 2021-08-21 03:43 GMT   |   Update On 2021-08-21 03:43 GMT
கொரோனா பரவலைக்குறைப்பதில் பொது சுகாதார நடவடிக்கைகளும், தடுப்பூசியும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
புதுடெல்லி:

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையிலும், அந்த வைரஸ் தொற்று பாதித்தவர்களில் டெல்டா வைரஸ் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என தெரிய வந்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும், அந்த வைரஸ் தொற்று விட்டு வைப்பதில்லை. என்ன, தொற்று பரவல் தீவிரமாகி உயிராபத்து போன்ற மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதில்லை.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிற இன்சாகாக் ஆய்வுக்கூடம், கொரோனா வைரஸ் மரபணு வரிசைமுறையை ஆராய்ந்து வருகிறது.

இந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட தனது அறிக்கையில்
கொரோனா வைரஸ்
பரவல் தொடர்பான பல தகவல்களை வெளியிட்டுள்ளது. முக்கியமானவை வருமாறு:-

* இந்தியாவில் ஏஒய் 1, ஏஒய் 2, ஏஒய்3 (டெல்டா பிளஸ்) ஆகிய வைரஸ்கள் மராட்டிய மாநிலத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் ஜூலை மாதம் காணப்பட்டன. அதே நேரத்தில் இவை டெல்டா வைரசை விட அதிக வளர்ச்சி தன்மையைக் கொண்டிருக்கவில்லை.

* இந்தியாவில் இதுவரையில் 61 டெல்டா பிளஸ் பாதிப்புகளை கண்டறிய முடிந்துள்ளது.

* கொரோனா இனப்பெருக்க விகிதம் என்பது 0.89 சதவீதமாக உள்ளது. அதாவது கொரோனா பாதித்த ஒருவர், 0.89 சதவீதத்தினருக்கு மட்டுமே பரப்புகிற தன்மையைக் கொண்டுள்ளார்.



* தடுப்பூசி போட்டுக்கொண்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களில் அதிகம் பேருக்கு டெல்டா வைரஸ் ஆதிக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

* 30 ஆயிரத்து 230 மாதிரிகளை பிரித்தெடுத்து ஆய்வு செய்ததில் 20 ஆயிரத்து 324 டெல்டா வைரசை சேர்ந்தவைதான்.

* இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்புகள் டெல்டா வைரஸ் சார்ந்தவை ஆகும்.

* நோய்த்தொற்றின் தீவிரத்தை குறைப்பதிலும், இறப்பைக் குறைப்பதிலும் தடுப்பூசி மிகவும் பயனுள்ளது. கொரோனா பரவலைக்குறைப்பதில் பொது சுகாதார நடவடிக்கைகளும், தடுப்பூசியும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

* தடுப்பூசி போடுகிறவர்களுக்கும் கொரோனா பாதிப்பு என்பது பொதுவான ஒன்றுதான். இந்தியாவிலும் இது எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





Tags:    

Similar News