ஆட்டோமொபைல்
கார்

விரைவில் இந்தியா வரும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்

Published On 2021-06-13 03:44 GMT   |   Update On 2021-06-13 03:44 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 எஸ் கிளாஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் புதிய எஸ் கிளாஸ் மாடல் இந்திய சந்தையில் ஜூன் 17 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. புதிய எஸ் கிளாஸ் மெர்சிடிஸ் நிறுவனத்தின் டாப் எண்ட் ஆடம்பர செடான் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. புது எஸ் கிளாஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை வெளியான எஸ் கிளாஸ் மாடல்களில் அதிகளவு ஆடம்பர அம்சங்கள் நிறைந்த மாடலாக இது இருக்கிறது. 



2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மாடல் S400d மற்றும் S450 வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த மாடல் 6 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இவை 367 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. S450 மாடலில் 435 பிஹெச்பி பவர், 520 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

பென்ஸ் எஸ் கிளாஸ் S350d மாடலில் உள்ள 3.0 லிட்டர் என்ஜின் 286 பிஹெச்பி பவர், 600 என்எம் டார்க் செயல்திறனும், S400d மாடலில் 330 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
Tags:    

Similar News